top of page



சமத்துவ முன்னேற்றக் கூட்டமைப்பு
குறைந்தபட்ச செயல்திட்டத்துடன் கூடிய பொதுக் கொள்கைகளை கொண்டிருக்கும். சமத்துவம், முன்னேற்றம் மற்றும் கூட்டாண்மை ஆகிய அடிப்படைகளில் செயல்படும் ஒரு புதிய அரசியல் கூட்டமைப்பு. இந்திய அரசியல் களத்தை மாற்றுவதற்கான தொலைநோக்குப் பார்வையுடன் கூடிய முயற்சி. தன்னலமற்ற, தொலைநோக்குடன் கூடிய செயல் திறன் மிக்க தலைவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு உதவுவதும், சிறந்த முற்போக்கான அரசியல் கலாச்சார மாதிரியையும், நவீன அரசியல் முறைகளையும் உருவாக்குவது அமைப்பின் நோக்கம்.
தற்போதைய பிரச்சனைகள்
தற்போதைய அரசியல் கட்சிகள் கூட்டணி என்பது ஒரு தனிப்பட்ட பலமான கட்சி முன்னெடுப்பதாக உள்ளது இதில் பல்வேறு அசவுகரியங்கள் உள்ளன.
-
தேர்தலை மையப்படுத்தி தொகுதி பங்கீட்டுக்காக மட்டுமே ஏற்படுத்தப்படுகிறது.
-
ஒரு தனிப்பட்ட பலமான கட்சி ஆதிக்கம் செலுத்தி தன் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்கிறது.
-
பலம் வாய்ந்த கட்சியின் கொள்கைகள் மேலோங்குகிறது.
-
முதன்மைக் கட்சி மற்ற கட்சிகளுக்கு ஆட்சியில் அதிகாரத்தில் பங்கு வழங்க விரும்புவதில்லை.
-
அனைத்துக் கட்சிகளுக்கும் சம வாய்ப்பு, உரிய அங்கீகாரம் வழங்கப்படுவது இல்லை.
-
தேர்தல் தவிர்த்து வேறு எந்த இணைந்த செயல்பாடுகளும் இல்லை.
-
பெரிய கட்சிகள், சிறு கட்சி முன்னேற்றத்திற்கு எந்த முயற்சியும் இல்லை அதில் அக்கறையும் இல்லை.
-
சிறு கட்சிகளின் திறன் வாய்ந்த நிர்வாகிகளை பெரிய கட்சிகள் ஈர்த்து அதை நீர்த்துபோக செய்கிறது.
-
சுயேச்சைகளுக்கு இடமில்லை.
தேவையான தீர்வு :
-
ஒரு பொதுவான அமைப்பு, அமைப்பின் பொதுக்கொள்கை, குறைந்தபட்ச செயல்திட்டம், என்றென்றும் கூட்டணி ஆட்சி, ஒவ்வொரு கட்சிக்கும், சுயேட்சிகளுக்கும் சம முக்கியத்துவம் மற்றும் சம வளர்ச்சிக்கான வாய்ப்பு.
